அமரர். செல்லப்பா சுப்பிரமணியம்

7ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம் : 06-08-1922 - மறைவு : 09-06-2010

ஐயா!
நீங்கள் மறைந்து இன்று ஏழு ஆண்டுகள்
நீங்கள் மறைந்துவிட்டீர்கள் ஆனால்
மறக்க முடியவில்லை.
'ஐயா' என்ற அந்த அருமையான வார்த்தை - அது
கொண்டுவரும் ஞாபகங்களோ ஏராளம்
அந்த அழகிய புன்முறுவல்
உதவிடும் அன்புக் கரம்
இரங்கிடும் இனிய இதயம்
எதை நாம் மறப்போம் ஐயா?
நாங்கள் உயர வேண்டும் என்பதற்காய்
நீங்கள் குனிந்த இடங்கள் எத்தனையோ
இன்னலுறாமல் நாம் வாழ
நீங்கள் செய்த தியாகங்கள் எத்தனையோ
உங்கள் உதிரத்தை வியர்வையாக்கி
எங்களைக் குளிர வைத்தீர்கள்
எங்கள் பட்டம் பதவிகளுக்காய்
நீங்கள் கனவு கண்டீர்கள்
கற்பாறையில் சிலை வடிக்கும் சிற்பியைப்போல்
எங்களைச் சிங்காரச் சிலையாக செதுக்கினீர்கள்
நீங்கள் ஒரு நல்ல தந்தையாய் வாழ்ந்து காட்டினீர்கள்.
நாங்கள் நல்ல பிள்ளைகளாய் வாழ வழி காட்டுங்கள்!
ஐயா.


மனைவி , பிள்ளைகள், மருமகள் , பேரப்பிள்ளைகள்தொடர்புகளுக்கு

416-949-9393