அமரர் சின்னையா தவராசா (இளைப்பாறிய தபால் அதிபர் இலங்கை)

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்:- 07—04—1941 - மறைவு:- 28—04—2016
தாயகம் தொண்டமானாறு கெருடாவிற் பதியிற் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து புலம்பெயர்ந்து கனடவில் வாழ்ந்து ஆமரத்துவம் அடைந்த அமரர் சின்னையா தவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவகலா சினைவஞ்சலி


நீழ நினைந்து நித்தமும் உம்மைத் தொழுகின்றோம். (எண்சீர் விருத்தம்)
சாந்தம் தவளும் சந்நிதியில் சந்தன மரமாய் நின்றாயே
வேந்தர் அணியும் மணிமகுடம் வீணே மண்ணில் சரிந்ததேன்
பூந்துளிர் பூமுகம் புன்னகையை.. பூமியிற் காணாது புலம்புகிறோம்
நீந்திய நீர்நிலை நெருப்பாச்சு! நித்தமும் நெஞ்சம் எரிகின்றோம்

மாண்டு மறைந்தது நினைவில்லை மனதில் நிறைந்து சிரிக்கின்றாய்
ஆண்டு ஒன்று ஆனாலும் அருகில் இருப்பதாய் உணர்கின்றோம்
மீண்டும் மீண்டும் அப்பாவே! பௌர்ணமி நிலவாய் வருகின்றாய்
காண்டா மணியே கற்பகமே கண்ணால் உன்னைக் காண்போமா!

தேகம் வெம்பித் தாகம் ஓங்கிக் கண்ணீPர் சொரிகிறதே
சோகம் தன்னைச் சொல்லி அழுதிட ஜீவன் துடிக்கிறதே
சாகும் போதும் சுந்தர முகத்தில் சிந்திய சிரிப்பெங்கே
வேகும் போதம் எங்களை விட்டு வேகா உன்னினைவே!

நகைச் சுவைப் பேச்செங்கே! உன்நையாண்டிக் கதைகள் எங்கே!
பகைவரை அன்பால் அணைக்கும் இன்பப் புன்னகை முகமெங்கே
மிகைப் படவே பேசாத மென்மை மனித மாண்பெங்கே
தகைசான்ற வித்தகம் எங்கே! தாயான தத்துவம் எங்கே!

குடம்பையும் புள்ளும் போல கொம்பொடு பூவும் போல
உடம்போடு உயிர் கொண்ட உறவென்ப துணர்தல் வேண்டும்
மடங்கொண்ட மனமேநீ மயங்கி மறுகிப் புலம்பு வதேன்
விடமுண்டான் பதம் சேர்ந்தார் தவமகன் என்றே தேறுவாயே!

குயிலே குயிலே கூவாயோ? குன்றத்துக் குமரனைப் பாடாயோ?
மயிலே மயிலே வாராயோ? வானத்து வைகுண்டம் போகாயோ!
துயிலே இன்றித் தவராசா தவமே செய்து தனித்திருப்பார்
ஜெயமே இறையருள் ஜெயமென்று எம்மைப் பற்றிச் சொல்வாயா!

உருமையோடு உனைநினைந்து ஊமையாய் நிற்கிறோம் பாசத்தால் கருவினில்
சுமந்நு காத்தவரை காவல் தெய்வத்தை மறப்போமா!
அருவும் உருவுமாய்ப் பாற்கின்றோம் ஆண்டவன் இடத்தில் கேட்கின்றோம்
தருமமே உருவான தந்தைக்கு திருவடி நிழலில் இடம்கொடுப்பாய்!

சாந்தி! சாந்தி! சாந்தி! என்று சேர்ந்துநின்று வாழ்த்துகிறோம் மாந்தருள்
மாணிக்கம் நீயன்றோ! மாதவமே! வாழிய! வாழியவே! மொழி பேச வளியின்றி
விழியாலே நீர்சிந்தி. அழியாத நினைவுகளைச் சுமந்து வாழும் பாசப் பறவைகள்
அமரரின் வாச மலர்த் தோட்டத்து வண்ணத்துப் பூச்சிகள்

மனைவி மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் பெறாமக்கள் மைத்துனர் மைத்துனிகள் உற்றார் உறவினர்

தகவல்

தொடர்புகளுக்கு பிரசாந்தி குசேலகுமார்
416-557-6579
றாஜேஸ்வரி தவராசா
416-245-9682