களையிட்டி, வறுத்தலைவிளான், தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பத்திரகாளிகோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னத்தம்பி நவரத்தினம் கடந்த 12-09-2017 செவ்வாய்க்கிழமையன்று திருநெல்வேலியில் காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-ஆச்சியம்மா தம்பதிகளின் கனி’ட புதல்வரும், A.R பொன்னம்பலம்-தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அருமை மருமகனும், காலஞ்சென்ற அன்னலட்சுமியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற அன்னபாக்கியம் மற்றும் இராசையா(லண்டன்), காலஞ்சென்ற தர்மலிங்கம், ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரகுராம்(சிட்னி, அவுஸ்திரேலியா), ஜெயராம் (இலங்கை மின்சார சபை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், வசந்தி (சிட்னி, அவுஸ்த்திரேலியா), விஜயதர்சினி( இலங்கை) ஆகியோரின்; அன்பு மாமனாரும், கல்யாண் (அவுஸ்த்திரேலியா) ரதீபன் (அவுஸ்த்திரேலியா) ஆகியோரின் பாட்டனும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, திருமதி இராசலட்சும்p, காலஞ்சென்ற தனலட்சுமி, மற்றும் விஜயலட்சுமி ஆகியோரின் மைத்துனரும், ரஞ்சனா, மனோகரன், சுலோஜனா, பிரபாகரன், குகநேசன், சிவநேசன், அகிலேஸ்வரி ஆகியோரின் சிறிய தகப்பனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை கடந்த 14ம் திகதி வியாழக்கிழமை மதியம் அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் பூதவுடல் திருநெல்வேலி பால்பண்ணை வீதியில் உள்ள இந்துப் பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்