அமரர் உயர்திரு செல்லத்துரை கிருபானந்தன்

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

அன்னை மடியில் 04-06-1948 ஆண்டவன் அடயில் 24-06-2017

முன்னைநாள் கொழும்பு மாலா ஸ்டோர்ஸ் மற்றும் ஜேர்மனி ர்நசநெ கரிகரன் ரேடர்ஸ்உரிமையாளர் யாழ். ஊர்காவற்றுறை தென் கரம்பனை பிறப்பிடமாகவும் வேலனை சோழாவத்தை கொழும்பு மற்றும் ஜேர்மனியை வதிவிடமாகக் கொண்ட அமரர் உயர்திரு செல்லத்துரை கிருபானந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

ஆண்டவன் தந்த அருட்கொடையாம் எந்தன் ஆருயிர்த் துணையே – எங்கள் அப்பாவே!
மண்ணில் மதிப்பொடு மலர்ந்து விண்ணில் விரைந்திட்ட நாள் முதலாய்
கண்ணில் நீர் சொரிந்து கலங்குகிறோமே!
அன்புடைய பெற்றோர்க்கு ஆருயிர் மகனாய் உற்ற துணைக்கு நல்லதோர் கணவனாய்
பெற்ற பிள்ளைகளுக்கு பெறுதற்கரிய தந்தையாய் உடன் பிறப்புகளுக்கு உயிர் சகோதரனாய்
மருமக்களுக்கு மனம் நிறைந்த மாமனாய் பேரப்பிள்ளைகளுக்கு பிரியம் கொண்ட பேரனாய்

உற்றார் உறவினர்கள் உள்ளம் நிறைந்தவராய் வளமோடும் புகழோடும் வாழ்ந்து
மறைந்திட்டாலும் இந்த வையகம் உள்ளவரை எங்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து வாழ்வீர்கள்
உங்கள் இனிய நல் ஆத்மா நயினை அம்பிகையின் பாதாரவிந்தங்களில்
நிரந்தரமாய் அமைதிபெற அம்பிகையின் பாதம் பணிகின்றோம்

இங்ஙனம் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், உடன்பிறப்புக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்
-தகவல்

தொடர்புகளுக்கு

கோபால் – 416 994 3861
ஜேர்மனி 011 49 2323386530    –   011 49 2323917826