அமரர் இமெல்ட ராணி சேவியர்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் கிழக்கைப்பிறப்பிடமாகவும், கனடா ரொரண்டோவில் வசித்துவந்தவருமான அமரர் இமெல்ட ராணி சேவியர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓடிச்சென்றது ஈராண்டு
முகமும் நினைவுகளும் எங்களின் மனதில்
என்றும் அழியா கோலமாய் வாட்டுதம்மா…
எல்லோர் மனதிலும் என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் அம்மா!
பிள்ளைகள் தான் உலகம்
என்று வாழ்ந்தாயே அம்மா
தனியாளாய் நின்று எம்மை வளர்த்தாயே
எம்மை அழவிட்டு சென்றதேனோ?
கலங்கி நிற்கும் எமக்கு ஆறுதல் கூற
தூக்கம் கலைந்து எழுந்து வாம்மா…

எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம். என்றும் உங்கள் நினைவுகளோடு… பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளை, சகோதரர்கள், மைத்துனர், மைத்துனிமார், நண்பர்கள், உறவினர்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவா (மருமகன்), லூனா (மகள்) (647) 761-8501