அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கவிஞர் வைரமுத்து மருத்துவ பரிசோதனை

சென்னை,

கவிஞர் வைரமுத்து சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு உடல் பரிசோதனைக்காக இன்று சென்றார். இதையடுத்து அவர் பற்றிய வதந்தி பரவியது. இது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் நான் முழு மருத்துவ பரிசோத னைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அதுபோன்று இப்பொழுதும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். நான் முழுமை யாக நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவ குறிப்பு- தெரிவிக்கிறது. எனவே பரபரப்பான செய்தி வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன். என்மீது அன்பு கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து அப்பல்லோவில் அனுமதிக் கப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து அவரது மகன் மதன் கார்க்கியிடம் கேட்ட போது, “அப்பா வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரி சென்றார். நானும் உடன் சென்றேன். நலமாக இருக்கிறார். ஆஸ்பத்திரியில் அனும திக்கப்படவில்லை” என்று கூறினார்.