அப்பல்லோவில் 73 வது நாட்களாக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் – தொகுப்பு

உடல்நலக் குறைவு காரண மாக கடந்த செப்டம்பர் 22-ந்தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த 73 நாட்களாக சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் நேற்று இரவு வரை யில் அவருக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டுள் ளது என்பது பற்றிய முழு விவரம் வருமாறு:-

செப்டம்பர் 22-ந்தேதி:- காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரண மாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதி.
செப்டம்பர் 23:- உடல் நிலை சீராக இருப்பதாக அப் பல்லோ முதல் அறிக்கை.
செப்டம்பர் 24:- -சாதாரண உணவு களை உட் கொள்வதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி தகவல்.
செப்டம்பர் 25:- மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வார் என்கிற தவறான செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் என்று அப்பல்லோ கேட்டுக் கொண்டது.
செப்டம்பர் 29:- – முதல்- அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளது, அவர் சிகிச் சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கிறார் என்றது அப்பல்லோ.
அக்டோபர் 2-ந்தேதி:- லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே அப்பல்லோ வருகை தந்து மருத்துவர்களுடன் ஆலோசனை.
அக்டோபர் 3:- – முதல்- அமைச்சருக்கு ஏற்பட்டி ருக்கும் தொற்று நோயை சரிசெய்ய, நோய்க்கொல்லி மருந்துகள் தரப்பட்டது, சுவாசக்கருவிகள் பொருத் தம்.
அக்டோபர் 4:- முதல்- அமைச்சரின் உடல்நிலை முன்னேறி வருகிறது, அவ ருக்குத் தரப்படும் சிகிச்சை தொடரப்படுகிறது எனத் தகவல்.
அக்டோபர் 6:- எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் லண் டன் மருத்துவர் அனை வரும் அப்போலோ மருத்து வர்களுடன் முதல்வர் சிகிச்சை குறித்து கலந்தா லோசனை. நாள்பட்ட நீரிழிவு நோய்க்கு தகுந்தது போல் சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாக தகவல்.
அக்டோபர் 8:- நுரை யீரலில் இருக்கும் அடைப்பு களை நீக்க சிகிச்சை அளிக் கப்பட்டது.
அக்டோபர் 10:- பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. எய்ம்ஸ் டாக்டர்கள் மீண்டும் வருகை.
அக்டோபர் 21:- தீவிர சிகிச்சைப் பிரிவு டாக்டர் களின் தலைமையில் இதய நோய்,நுரையீரல் நோய், தொற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக அப்போலோ அறிக்கை.
டிசம்பர் 4-ந்தேதி:– முதல்-அமைச்சருக்கு மாலையில் திடீர் இதய துடிப்பு (மாரடைப்பு) பிரச்சினை ஏற்பட்டதால் இதயநோய் மற்றும் நுரையீரல் நோய் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாக அப்பல்லோ திடீர் அறிக்கை.
கடந்த மாதம் (நவம்பர்) மட்டும் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவ அறிக்கை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்பல்லோ ஆஸ்பத்திரி சேர்மன் பிரதாப் சி.ரெட்டி 3 முறை ஜெயலலிதா குணம் அடைந்து வருவதாக கூறினார்.