அதிவேக 20,000: விராட் கோலி அசத்தல்

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 20 ஆயிரம் ரன்களை எட்டினார்.

மான்செஸ்டரில் நடக்கும் விண்டீசுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, தனது 37 வது ரன்னை எட்டிய போது, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 20 ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இவர், 417 இன்னிங்சில் (டெஸ்ட்: 131 இன்னிங்ஸ், 6613 ரன்கள், ஒருநாள்: 224 இன்னிங்ஸ், 11124* ரன்கள், சர்வதேச ‘டுவென்டி-20’: 62 இன்னிங்ஸ், 2263 ரன்கள்) இந்த இலக்கை அடைந்தார்.

இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் 20 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின், வெஸ்ட் இண்டீசின் லாரா சாதனையை முறியடித்தார். இவர்கள் இருவரும் தலா 453 இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்திருந்தனர்.