அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்ப்பந்தத்தால் சசிகலா படம் அகற்றம்: கே.வி.ராமலிங்கம் எம்எல்ஏ கருத்து

அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்ப்பந்தத்தால் சசிகலா படம் அகற் றப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பின ருமான கே.வி.ராமலிங்கம் தெரிவித் தார்.

ஈரோட்டில் நேற்று ‘தி இந்து’ விடம் அவர் கூறியதாவது: அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்துக்காக ரூ.50 கோடி வரை பேரம் பேசி யது யார் என்று இதுவரை சொல்ல வில்லை. யாருக்காக லஞ்சம் கொடுக்கச் சென்றனர் என்பதையும் தெரியப்படுத்தவில்லை.

யாரோ ஒருவர் சொன்னதை வைத்து தினகரனை கைது செய் துள்ளனர். அவரை மிரட்ட வேண் டும் என்று கைது செய்துள்ளனர். அதிமுக இரு அணிகளையும் இணைப்பது தொடர்பான பேச்சு வார்த்தை சுமுகமாக நடந்து வரு கிறது. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் எனது கருத்தை கூட்டத்தில் தெரிவித்துள்ளேன்.

எம்எல்ஏக்களிடம் ஆலோசனை

இணைப்பு குறித்து எம்எல்ஏ-க் களிடம் ஆலோசிக்கப்பட்ட பின்பே முடிவு எடுக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா வின் படத்தை நிர்ப்பந்தத்தின்பேரில் எடுத்துள்ளனர். இதற்கெல்லாம், விரைவில் நல்ல முடிவு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.