- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை
- தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்யும் ஏகத்துவ ஜமாஅத் என்ற அமைப்பின் நிறுவனர் இப்ராஹிம்

அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார் டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வதுஅதிபராக பதவியேற்றுக்கொண்டார்.
சமீபத்தில், 2-வது முறையாக தான் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் இன்று முறைப்படி துவங்கினார். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லண்டோவில் டிரம்ப் பிரசாரத்தை துவங்கினார். 2020- நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.