அதிகார பலத்திற்காகவும் சுக போகத்திற்காகவும் மீண்டும் “தேர்தல்”போட்டிகள்: மக்கள் மீண்டும் ஒருதடவைஏமாற்றப் படுகுழியில்..

இலங்கையில்மீண்டும் ஒருதேர்தலுக்கானஅறிவிப்பும் வந்துவிட்டது. அறிவிப்புவந்தநாட்தொடக்கும் ஆராவாரங்களுக்கும் அட்டகாசங்களுக்கும் குறைவே இல்லை. தெற்கிலும் ஊழலும் தமிழர் படுகொலையும் செய்தமகிந்தாதொடக்கம் எப்போதும் தந்திரநரியாகவேசெயற்படும் ரணில் வரையும் அனைவருமேமீண்டும் அணியணியாய் திரண்டுநிற்கின்றார்கள். தேர்தல் போட்டிகளாம். புதவிகளைக் கைப்பற்றிஅதிகாரபலத்தை நிரூபிக்க வேண்டுமாம்.
இது வடக்கிலும் கிழக்கிலும் இன்னும் “மோசமாகவே” நகர்ந்து செல்லுகின்றது.

பாராளுமன்றம்,மாகாண சபைகள்,பிரதேச சபைகள் மாநகர சபைகள்,நகர சபைகள் எனஆட்சிஅதிகாரத்தில் வீற்றிருக்கும் விருப்போடு போட்டிகளில் இலட்சக்கணக்கானவர்கள். எஞ்சியோர் பாவம்! மீண்டும்,மீண்டும் ஏமாந்தவர்களாகவே வாழ்ந்து முடிக்கப்போகின்றார்கள் போலும்.

இதுவரைகாலம் பாராளுமன்றத்தில் என்னசெய்தீர்கள்? எங்கள் உறவுகளைசிறைச்சாலைகளிலும் சவக்கிடங்குகளிலும் வைத்துவிட்டுஎமக்காகஎதைச் செய்து “கிழித்தீர்கள்” என்று பாதிக்கப்பட்ட மக்கள் வாய்கள் கிழியக் கத்திகத்தி போராட்டங்களை நடத்தினாலும்,அவையனைத்தும் “செவிடன் காதில் ஊதியசங்கு”போன்றே ஆகிவிட்டனவா என்று கேட்கத் தோன்றுகின்றது.அரசியல் பதவிகளைப் மீண்டும் கைப்பற்றிக்கொண்டு மீண்டும் அதிகாரபலத்தோடு “ஆதனப் பலத்தையும்” பெற்றுக்கொள்ளத் துடிக்கும் அவர்களை உங்கள் வீடுகளில் வரவேற்காமல் இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். மாற்றம் ஒன்றுக்காக ஒன்றுபடுங்கள்!