அதிகாரம் தரப்பட்டால் வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்துவோம் என்று அட்டகாசமாகப் பேசுகின்றார் இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க

இராணுவத்தினருக்கு மீள அதிகாரத்தைதந்தால் வடக்கில் உள்ள வாள்வெட்டுக்குழுக்களை கட்டுப்படுத்திக் காட்டுவோம் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி – தலதா மாளிகைக்கு சில நாட்களுக்கு முன் சென்றிருந்த இலங்கையின் இராணுவத் தளபதியிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத குழுக்களை கட்டுப்படுத்த இராணுவத்தினருக்கு அதிகாரம் அவசியம் என யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்தளபதி அண்மையில் தெரிவித்திருந்ததை குறிப்பிட்ட ஊடகவியலாள ர்கள், அந்த குறித்த அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்துள்ள இராணுவத் தள பதி, இது குறித்து எழுத்துமூலம் அறிவிக்கப்ப ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.அத்துடன், பாதுகாப்பு சபை மற்றும் புல னாய்வு பிரிவின் கலந்துரையாடல்களின் போதும் இது குறித்து கலந்துரையாடப்படும்.இதேநேரம், இராணுவத்தின் புலனாய்வு தகவல்களை பொலிஸாருக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும், வழங்குவது குறித்து எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.இந்த நிலையில், குறித்த விடயம் தொட ர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்மானத்தை மேற்கொண்டு குறிப்பிட்ட சில அதிகாரங்களை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டும் வழங்கினால் அதனை தம்மால் சரியாக செயற்படுத்த முடியும் என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.