‘அண்ணா எம்ஜிஆர் அம்மா திமுக’- எம்ஜிஆர் அண்ணன் மகன் புதிய கட்சி தொடங்கினார்

‘அண்ணா எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சியை எம்ஜிஆரின் அண்ணன் மகன் எம்.ஜி.சந்திரன் நேற்று தொடங்கினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கர பாணியின் மகன் எம்.ஜி.சந்திரன். இவர் திருச்சி திருவெறும்பூர் காட்டூ ரில் ‘அண்ணா எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சியை நேற்று தொடங்கி னார். கருப்பு, சிவப்பு நிறத்தில் நடுவில் அண்ணா, எம்ஜிஆர், ஜெய லலிதாவின் படங்களுடன் கூடிய கட்சிக் கொடியையும், நிர்வாகிகளையும் அறிமுகப்படுத்தி, செய்தி யாளர்களிடம் சந்திரன் கூறியதாவது:
சிதறிக்கிடக்கும் அதிமுகவி னரை ஒன்று சேர்க்கும் நோக்கில், புதிய கட்சியை தொடங்கியுள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்கு சேவை செய் வதே கட்சியின் பிரதான நோக்கம். ஆர்.கே. நகரில் போட்டியிடுவது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

முன்னதாக, ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசும்போது, “மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் போராடினால் கட்சி தானாகவே வளரும்” என்றார்.

இந்தக் கூட்டத்தில், “ஜெயலலிதா மரணத்தில் உண்மையை வெளிக்கொணர போராட்டம் நடத்த வேண்டும். போயஸ் கார்டனை நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும். மாவட்டந்தோறும் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க வேண்டும். அதிமுகவில் அதிருப்தி யாக உள்ள தொண்டர்களையும், தீபா பேரவைக்குச் சென்று ஏமாற்றம் அடைந்தவர்களையும் கட்சியில் சேர்த்து, உள்ளாட்சித் தேர்தலில் தமிழகமெங்கும் ஒரே சின்னத்தில் போட்டியிட நடவ டிக்கை எடுக்க வேண்டும். மக்கள் சக்தியை ஒன்று திரட்டி அதிமுக வையும், இரட்டை இலை சின்னத் தையும் மீட்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.