
அடுத்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் நன்கு உணர்கின்றேன்
முதல்வர் “விக்கி” விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:- தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியிடமிருந்து எனக்கு அழைப்பு வரக் கூடியசாததியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாக தேர்தலில் நிற்கலாம். ஆனால் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாயரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. புதியகட்சியொன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றனர். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்றும் கூறுகின்றனர். ஆனால் இதற்குரிய காலம் கனிந்துவிட்டதோ என்பதை நான் அறியேன் என்றும் வடக்கு மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் உங்களை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்போவதில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளாரே இது குறித்து உங்களின் பதில் என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
என் மேல் இருக்கும் உருக்கத்தினால், பாசத்தினால், பரிவினால் என்னைக் கஸ்டப்படுத்தக்கூடாது என்ற மனோநிலையில் என் மாணவர் காரணங்களை அடுக்கியுள்ளார். அதன் முழுத்தாற்பரியத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலை நாட்டப்படவேண்டும். இதுவே எனது பிரார்த்தனை. எமது மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. தற்போது பொருளாதார ரீதியாகப் பல செயற்திட்டங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன். நான் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் அறிவேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் இருந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.
தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு என்னையே காரணம் காட்டுகின்றார்கள். சிலர் தம்மைத் தாமே கண்ணாடியில் பார்த்துக் காரணங்களைக் கண்டு பிடிக்காமல் என்னை வைகின்றார்கள். ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்புவரக் கூடியசாத்தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாகத் தேர்தலில் நிற்கலாம். ஆனால் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள் இடையுறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்துவிட்டதோ நான் அறியேன்.
எமது அரசியல்,பொருளாதார, சமூகமற்றும் கலாசார அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான பயணப்பாதையைத் தனிநபர்கள் தீர்மானிக்காமல் அறிவு ஜீவிகளின் பங்களிப்புடன் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் செயற்பாட்டை இவரைகாலமும் முன்னெடுத்திருப்போமானால் இதையைத் தனிநபர்கள் தீர்மானிக்காமல் அறிவு ஜீவிகளின் பங்களிப்புடன் ஒருநிறுவனமயப்படுத்தப்பட்டஅரசியல் செயற்பாட்டை இதுவரை காலமும் முன்னெடுத்திருப் போமானால் எம்மிடையே பிளவுகள் ஏற்பட்டிருந்திருக்காது,தெற்கில் எவர் வரப்போகின்றார் என்ன நடக்கபோகின்றது என்ற மனக்கிலே சங்களுக்கு உள்ளாக வேண்டியிருந்திருக்காது. நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் இனமாக இருக்க வேண்டி வந்திருக்காது.