அடுத்த தேவர் ஜெயந்திக்குள் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணி காணாமல் போகும் -டிடிவி தினகரன்

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குருபூஜை கடந்த 28-ந்தேதி தொடங்கியது.

முதல் நாள் விழா ஆன்மீக விழாவாகவும், 2-வது நாள் விழா அரசியல் விழாவாகவும் கொண்டாடப்பட்டது. இன்று தேவரின் குருபூஜை நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு காலையிலேயே ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக நினைவிடம் வந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் ஜோதி ஏந்தி வந்தனர். நினைவிடம் மற்றும் தங்க கவசத்தில் ஜொலித்த முத்து ராமலிங்கதேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேவர் தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுக்க ஓபிஎஸ் தரப்பில் இடைஞ்சல் செய்யப்பட்டது.அடுத்த தேவர் ஜெயந்திக்குள் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணி காணாமல் போகும் என கூறினார்.