அடம்பிடிக்கும் கூட்டமைப்பு…! அறிவுரை கூறும் அரசாங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சமஷ்டி எனஅடம்பிடிக்காது, சமஷ்டிப் பண்புக்கூறுகளைக் கொண்டதீர்வுத்திட்டமொன்றை ஒற்றையாட்சிக்குள்

பெறுவதற்கு முன்வரவேண்டுமென கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்கஅமைச்சருமான டிலான் பெரேரா இந்தகோரிக்கையினை முன்வைத்துள்ளார். இது குறித்துதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இனப்பிரச்சினை தொடர்பான தீர்வு விடயத்தில் சமஷ்டி என்ற சொற்பதமானதுபெரும்பான்மை இனத்தவரிடையே பாரிய பிரச்சினையாக உள்ளதெனவும்தெரிவித்துள்ளார்.

எனவே, ஒற்றையாட்சிக்குள் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட முழுமையானஅதிகாரப் பகிர்வை பெற்றுக்கொள்ள முன்வரவேண்டுமெனவும், அதனை நாட்டுமக்களுக்கு அறிவிக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன முழுமனதோடு செயற்பட்டு வருகின்றார் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், கிடைக்காது எனத் தெரிந்த ஒரு விடயத்திற்காகக் காத்திருப்பதைவிட கிடைக்கக்கூடிய விடயத்தை வேறு வடிவில் பெற்றுக்கொள்வதில்தவறில்லையென குறிப்பிட்டுள்ள அவர், கூட்டமைப்பு இதனை உணர்ந்துசெயற்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.