- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

அஜித் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகும் ‛ஹிப்-ஹாப்’ யோகி பி
பிரபல ஹிப்-ஹாப் பாடகர் யோகி பி. மலேசியாவைசேர்ந்தவரான இவர், தனது மலேசிய நண்பர்களுடன்சேர்ந்து
பல்வேறு இசை ஆல்பங்களை உருவாக்கியுள்ளார்.அதில் இவரது ‛மடை திறந்து பாடல்…’ மிகவும் பிரசித்துபெற்றவை. இசை ஆல்பங்களை இயற்றி வந்த யோகி பி-யை விஜய்யின் குருவி படத்திற்காக அழைத்து வந்தார்வித்யாசாகர். அதில் இடம்பெற்ற ‛ஹேப்பி நியூ இயர்’பாடலை இவர் தான் பாடினார். தொடர்ந்து தனுஷின்பொல்லாதவன் படத்தில் ‛எங்கேயும் எப்போதும்…’பாடலை பாடினார். அதன்பின் தமிழில் பெரியளவில்பாடாமல் இருந்த யோகி பி இப்போது மீண்டும் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார். அவரைஅழைத்து வந்திருப்பவர் இசையமைப்பாளர் அனிருத்.
அனிருத், தான் இசையமைத்து வரும் அஜித்தின் 57-வது படத்தில் யோகி பி-யை பாடவைத்திருக்கிறார். இதுப்பற்றி அனிருத் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது…‛‛தமிழ் ஹிப்-ஹாப்பின் தந்தையான யோகி பி, 7 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்தின்‛AK57′ படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
அதற்கு யோகி பி-யும்… ‛‛இந்த வாய்ப்பு அளித்த சகோதரர் அனிருத்திற்கு நன்றி…” என்றுதெரிவித்திருக்கிறார்.
அஜித்தின் 57-வது படத்தை சிவா இயக்குகிறார். அஜித்துடன் காஜல் அகர்வால்,அக்ஷ்ராஹாசன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபுராய் ஆகியோர் முக்கிய ரோலில்நடிக்கின்றனர்.