- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

அஜித்துக்கு வில்லனாக விவேக் ஒபராய் ஒப்பந்தம்
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் வில்லனாக விவேக் ஒபராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள்ளார்.
‘வீரம்’,’வேதாளம்’ படக் கூட்டணியான அஜித் – சிவா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் காஜல் அகர்வால்,அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா,சென்னை,ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு பல்வேறு முன்னணி இந்தி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. இர்பான் கான்,அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பல பெயர்கள் வில்லனாக நடிக்கவிருப்பதாக செய்திகளில் அடிப்பட்டது.
ஆனால்,படக்குழு வில்லனாக விவேக் ஒபராய்யை ஒப்பந்தம் செய்திருக்கிறது. விரைவில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சுனாமி பாதிப்பு ஏற்பட்ட போது,பல்வேறு உதவிகள் செய்து பிரபலமானவர் விவேக் ஒபராய். அவர் நடிப்பில் உருவாகும் முதல் படமாக அஜித் – சிவா படம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.