அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியா – பாகிஸ்தான் இடையே முழு அளவில் போர் ஏற்படும் : பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத்

அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியா – பாகிஸ்தான் இடையே முழு அளவில் போர் ஏற்படும் என பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் கூறியுள்ளார்.

ராவல்பிண்டியில் நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது கூறுகையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே, வரும் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் முழு அளவிலான போர் நடக்கும். காஷ்மீர் போராட்டத்திற்கான உறுதியான நேரம் வந்துவிட்டது. இந்த விவகாரத்தில், இந்தியாவுடன் நடக்கும் போர், இரு நாடுகளுக்குமான கடைசி போராக இருக்கும். காஷ்மீர் பிரச்னை தீர வேண்டும் என ஐ.நா., விரும்பினால், அங்கு பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

இந்திய அரசால், காஷ்மீர் அழிவின் சூழ்நிலையில் உள்ளது. இதற்கு பாகிஸ்தான் தான் தடையாக உள்ளது. இந்த விவகாரத்தினால், முஸ்லிம் நாடுகள் மவுனம் காப்பது ஏன்? இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடக்கும் என இன்னும் நம்புபவர்கள் முட்டாள்கள். நமக்கு உற்ற நண்பனாக சீனா உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.